வாழ்வரசியின் கணவன்!
- Get link
- X
- Other Apps
இசைத்தட்டுக்களே வாழ்க்கை என கிடந்தவன் குமரேசன்
ஒலிநாடாக்களில் விரும்பும் பாடல்களை நிரப்பித்தருவதுதான் அவன் தொழில். வெளிநாட்டு மியுசிக்சிஸ்டம், விதம்விதமான
ஒலிபெருக்கி பெட்டிகள் வைத்து ரசனையாக ராஜா பாடல்களை
ஒலிக்க விட்டு TDK, T-Series,SONY, காசெட்டுகளில் அதை நிரப்பும்
வித்தை அலாதியானது. காதல்வயப்பட்ட இளைஞர்களின் புகலிடம் அதுதான். பாஸ், ட்ரபிள், வாய்ஸ் என தரம்பிரித்து, அவரவர் ரசனைக்கேற்ப பாடல்களை நிரப்பும் அவன், பாடல்களிலேயே எங்கள் மனதிலும் நிரம்பியிருந்தான். காதலியோ, நண்பனோ இந்த பாடல் எந்த படம், இந்தப்படத்தில் எந்த பாட்டு எனும் கேள்விகளுக்கு விடை விரல்நுனியில் இருக்கும். இப்படி பாடல்களை மட்டுமே கட்டிக்கொண்டு உருகியவனை அவன் மனைவிக்கு பிடிக்காமல் ஏன் போனது என எங்களுக்கு தெரியாது. இந்த தொழிலில் வரும் சொற்ப வருமானம் பிடிக்காமல் அவனுடன் எப்போதும் போர் செய்தபடி இருப்பாள். அரண்மனைக்கிளி படத்தில் “வீணைக்கு வீணைக்குஞ்சு” பாடலை ராஜாவுடன் இணைந்து உருகி ஒலிப்பேழையில் ரெகார்ட் செய்த சமயம் அவன் மனைவி கிணற்றில் விழுந்து செத்துப்போனதாக தகவல் வந்தது. ஒரு கைக்குழந்தையை வீட்டில் விட்டு எப்படி அத்தனை கொடூரமாய் செத்துப்போக மனம் வந்தது, அவ்வளவு கல்நெஞ்சக்காரியா என எல்லோரும் அவள் மேல் கோபமானோம். அன்றிலிருந்து அரை உயிராய் இருந்த குமரேசனுக்கு பாடல்கள்தான் பாதி உயிரை தந்து வந்தது. ஒரு கட்டத்தில் கேசட்கள் வழக்கொழிந்து, நகக்கண் அளவே உள்ள மெமரி சிப்கள் வரத்துவங்கியதும் அவன் தொழிலை விடவேண்டி வந்தது. வருமானம் இல்லாமல் இருப்பதைக்காட்டிலும் கொடுமையானது மனைவி இல்லாமல் குழந்தையை வளர்ப்பது. சிரமப்பட்டு வளர்த்த மகனை இன்று மாலை ஒரு கார்க்காரன் காலை ஒடித்து விட்டான். அவனுக்கென யாருமில்லை. ஒரு அலைபேசியில் நண்பனை அழைத்து மருத்துவமனை சென்று கட்டுப்போட்டு, இப்போதுதான் அவன் வீட்டில் விட்டு வந்தேன். ஒரு அப்பாவும் மகனும் மட்டும் வாழும் அந்த வீடு சிதிலமடைந்து இருந்தது. போர்வைகள், துணிகள் எதுவும் துவைக்காமல் அலங்கோலமாக கிடந்தது. கால் கட்டுடன் உள்ளே நுழைந்த பையன் ஓரே ஒரு சுவிட்சை ஆன் செய்தான்.ஒரு பழைய பிலிப்ஸ் டேப் ரெகார்டரில் “அழகான மஞ்சப்புறா..அதன்கூட மாடப்புறா” என்று அதே அரண்மனைக்கிளி பாடல் ஒலித்தது! அதுவரை என் கைத்தாங்கலாக வந்தவன் சட்டென என கையை விட்டு நன்றி சொல்லிவிட்டு அந்தப்பாடலுடன் பாடலானான்!

Comments
Post a Comment