Posts

Showing posts from 2017
சோமு மாமாவின் காதல் கடிதங்கள். அப்பாவின் சரி வயது நண்பர் சோமசுந்தரம் மாமா. பால்யத்தில் இருந்து இடைவெளியே விழுந்துவிடாத பெரு நட்பு அவர்களுடையது. எங்களூர் மணல்வெளிகளில் அவர்கள் கழித்த காலம், காக்கா-குஞ்சு விளையாடிய வாகை மரங்கள் சாட்சியுடன் இன்னமும் முற்றி வளர்ந்து இருக்கின்றன. கிளைமுறிந்து விழுந்து கால்கள் பிசகிய நேரமும்,தெரியாமல் பட்ட கல்லடிகளில் இருவர் ரத்தமும் ஜாதியை தாண்டி ஒரே கல்லில் தோய்ந்திருக்கக்கூடும். இத்தனைக்கும் அவர்களுக்குள் எந்த உறவுமுறையையும் இட்டு அழைக்கும் பழக்கமில்லை. பாண்டிச்சேரியில் ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்சில் சோமு மாமாவுக்கு வேலை கிடைத்த சமயம்தான் அப்பா வெறுமையையும் தனிமையும் உணரத்தொடங்கினார். கிட்டத்தட்ட காதலியை பிரிந்த சோகம் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது. ஒரு வாரம் கழித்து வந்த இன்லேன்ட் கடிதத்தில் அப்பா சொக்கித்தான் போனார். அது அப்பாவுக்கு வந்த முதல் கடிதமாகக்கூட இருக்கலாம். ஃபோக்ஸ் கம்பியை கொக்கிபோல் வளைத்து விட்டத்தில் மாட்டி குத்திவைக்கப்பட்ட அந்த முதல் கடிதத்தில் குவிந்திருந்த எழுத்துக்கள் வீட்டை நிறைத்தன! அன்றைக்கு ஆரம்பித்த கடிதங்கள், வருடம் ஒருமுறை வரு