பூர்வ ஜென்ம...
நண்பரின் சர்விஸ் சென்டரின் முன்நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா என்னை அருகில்வந்து சன்னமான குரலில் அழைத்தார். "தம்பி நீங்க ரத்தினம் அக்கா பையன் தானே, என்னை உங்களுக்கு தெரியாது ஆனா, உங்களை எனக்குதெரியும்..ஒரு உதவி." என்று ஆரம்பித்தார். "சொல்லுங்க என்ன பண்ணனும்" "பக்கத்துலதான் வீடு ஒரு எட்டு வந்தா கொஞ்சம் உபயோகமா இருக்கும்" "என்ன விஷயம் சொல்லுங்க வாரேன்" "என்ககூடப்போறந்தவங்க பசங்க யாரும் இல்லை.மூனும் பொண்ணுங்க, கொஞ்சநேரம் முன்னாடி எங்கப்பா இறந்த ுட்டார் என்ன பண்றதுன்னு தெரியலை குளிப்பாட்டி சேர்ல வைக்கணும், சொந்தங்களுக்கு சொல்லிவிட்ருக்கு, அவங்க வாறதுக்கு மதியம் ஆயிடும் அதுவரைக்கும் அப்படியே வச்சிருக்க முடியாது அதான் கொஞ்சம் உதவி பண்ணீங்கன்னா..." என்றார் துளி சலனமின்றி. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஒரு பிரேதத்தை குளிப்பாட்ட வேண்டுமா தனியாளாக! கைகால் உதற ஆரம்பித்தது. என்னை வேறு தெரியும் என்று சொல்லிவிட்டார்.அம்மாவின் பெயரை சொல்கிறார். ஒருவேளை அமாவுக்கு தெரிந்தவராக இருக்குமோ என் யோசித்தவாறே சென்றேன். ஒரு அகண்ட...