Posts

சோமு மாமாவின் காதல் கடிதங்கள். அப்பாவின் சரி வயது நண்பர் சோமசுந்தரம் மாமா. பால்யத்தில் இருந்து இடைவெளியே விழுந்துவிடாத பெரு நட்பு அவர்களுடையது. எங்களூர் மணல்வெளிகளில் அவர்கள் கழித்த காலம், காக்கா-குஞ்சு விளையாடிய வாகை மரங்கள் சாட்சியுடன் இன்னமும் முற்றி வளர்ந்து இருக்கின்றன. கிளைமுறிந்து விழுந்து கால்கள் பிசகிய நேரமும்,தெரியாமல் பட்ட கல்லடிகளில் இருவர் ரத்தமும் ஜாதியை தாண்டி ஒரே கல்லில் தோய்ந்திருக்கக்கூடும். இத்தனைக்கும் அவர்களுக்குள் எந்த உறவுமுறையையும் இட்டு அழைக்கும் பழக்கமில்லை. பாண்டிச்சேரியில் ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்சில் சோமு மாமாவுக்கு வேலை கிடைத்த சமயம்தான் அப்பா வெறுமையையும் தனிமையும் உணரத்தொடங்கினார். கிட்டத்தட்ட காதலியை பிரிந்த சோகம் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது. ஒரு வாரம் கழித்து வந்த இன்லேன்ட் கடிதத்தில் அப்பா சொக்கித்தான் போனார். அது அப்பாவுக்கு வந்த முதல் கடிதமாகக்கூட இருக்கலாம். ஃபோக்ஸ் கம்பியை கொக்கிபோல் வளைத்து விட்டத்தில் மாட்டி குத்திவைக்கப்பட்ட அந்த முதல் கடிதத்தில் குவிந்திருந்த எழுத்துக்கள் வீட்டை நிறைத்தன! அன்றைக்கு ஆரம்பித்த கடிதங்கள், வருடம் ஒருமுறை வரு

மனநலம்

உங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியரை எப்போதாவது மனநலம் தவறியவராக பார்த்திருக்கிறீர்களா? அதற்கான சாத்தியங்களுடன் தான் இந்த சமூகம் இருக்கிறது          -  ---வண்ணதாசன். பேருந்தில் உடன் பயணித்த அந்த நடுத்தர வயதுக்காரர் தான் இப்போது அடைக்கலமாகியிருப்பது இமையமலையில் என்றார்.”அங்கு சென்று எழுபது வருடங்கள் ஆகிறது என்றும் இப்போது தனக்கு ஐம்பத்தெட்டு வயதாகிறதும் என்றார். புத்தி பேதலிக்காமல், உடுப்பை கிழித்துக்கொள்ளாமல் தினம் தினம் ஷவரம் செய்து புது உடுப்பு போட்டுக்கொண்டும் எழுதப்படிக்க தெரிந்தும் இந்த பேருந்து இந்த இடத்திற்கு செல்கிறது, எந்த நிறுத்தத்தின் பின் தான் இறங்கவேண்டும் எனும் குறைந்த பட்ச பிரக்ஞையுடன் ஆனால் எப்போதோ அல்லது ஏதோ ஒரு காலத்தில் தன் மனதை மனதின் செயல்பாடுகளை உறைய வைத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.. இந்த நிலையிலிருந்து அவர் மீளவிரும்பவில்லையா அல்லது எப்படிப்பிழைத்தாலும் அந்த வயதிற்குப்பின் இந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது எனும் முன் அனுமானத்துடன் இருக்கிறாரா எந்த்தெரியவில்லை.அடுத்த விநாடி பற்றிய நிகழ்வில் அல்லது பொருப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத விட்டேத்தி

SURVIVAL OF THE FITTEST

இப்போதெல்லாம் சுமாரான உணவகங்களில் கூட சாப்பிட்டு முடித்ததும் புத்தகம் போன்ற அட்டைகளில்தான் சாப்பிட்ட ரசீது வைக்கிறார்கள். அனேக சிப்பந்திகளும் மேலைய நாட்டினர் போல் ஒரே நிற உடுப்பணிந்து பவ்யமாக தமிழக அமைச்சர்கள் போல் நின்றுகொண்டுதான் கட்டளை கோருகிறார்கள். எனக்குத்தெரிந்த உள்ளூர் உணவகம் ஒன்றில் பலவருடம் பரிமாறுபவராக சிவராஜ் என்பவர் இருக்கிறார். அறுபதைக்கடந்த அவர் இதற்குமுன் இருந்த உணவகத்தை இழுத்து மூடிவிட்டதால் இப்போது இங்கிருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடன் ஊக்கத்தொகை தருகிறவர் தராதவர் என எந்த பேதமும் இன்றிவாடிக்கையாளர்களை எதிர்கொள்கிறவர். ரசீதை தருவதே சூடம் காட்டும்போது இடது கைவிரல்கள் வலது கணுக்கை அருகேபடும்படி இருக்குமே அப்படி பக்தியுடன் தருவார். சிலர் ஊக்கத்தொகை கொடுக்கும்போதும் அப்படியேதான் பெற்றுக்கொள்வார். என் சிறு வயதிலிருந்தே அவரை அப்படித்தான் பார்த்துவருகிறேன். மீசை அரும்பாத வயதிலேயே அவருக்கு ஒரு முதலாளி தோரணையில் காசு கொடுத்திருக்கிறேன். ஒரு முறை அப்பாவுடன் போகும்போது சாப்பிட்டு முடித்ததும் அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்து நீண்டநேரம் கழித்து அவருக்க

பூர்வ ஜென்ம...

நண்பரின் சர்விஸ் சென்டரின் முன்நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா என்னை அருகில்வந்து சன்னமான குரலில் அழைத்தார். "தம்பி நீங்க ரத்தினம் அக்கா பையன் தானே, என்னை உங்களுக்கு தெரியாது ஆனா, உங்களை எனக்குதெரியும்..ஒரு உதவி." என்று ஆரம்பித்தார். "சொல்லுங்க என்ன பண்ணனும்" "பக்கத்துலதான் வீடு ஒரு எட்டு வந்தா கொஞ்சம் உபயோகமா இருக்கும்" "என்ன விஷயம் சொல்லுங்க வாரேன்" "என்ககூடப்போறந்தவங்க பசங்க யாரும் இல்லை.மூனும் பொண்ணுங்க, கொஞ்சநேரம் முன்னாடி எங்கப்பா இறந்த ுட்டார் என்ன பண்றதுன்னு தெரியலை குளிப்பாட்டி சேர்ல வைக்கணும், சொந்தங்களுக்கு சொல்லிவிட்ருக்கு, அவங்க வாறதுக்கு மதியம் ஆயிடும் அதுவரைக்கும் அப்படியே வச்சிருக்க முடியாது அதான் கொஞ்சம் உதவி பண்ணீங்கன்னா..." என்றார் துளி சலனமின்றி. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஒரு பிரேதத்தை குளிப்பாட்ட வேண்டுமா தனியாளாக! கைகால் உதற ஆரம்பித்தது. என்னை வேறு தெரியும் என்று சொல்லிவிட்டார்.அம்மாவின் பெயரை சொல்கிறார். ஒருவேளை அமாவுக்கு தெரிந்தவராக இருக்குமோ என் யோசித்தவாறே சென்றேன். ஒரு அகண்ட

பாட்டி

எண்பத்தெட்டு வயது வரை உயிரோடிருந்த சீனிமுத்து பாட்டி அதுவரை தன் உயிரை கெட்டியாய் பிடித்திருந்தது வாழ்க்கையின் மீதிருந்த பற்றினால் அல்ல.தனக்கொரு பிள்ளையைக்கொடுத்துவிட்டு இளம் வயதிலேயே உயிரை விட்ட கணவனுக்காகவும் இல்லை. பிறந்த குழந்தை மனவளர்ச்சி குன்றியது தெரிய ஐந்து வருடம் ஆன நிலையில் அதற்குப்பின் ஒவ்வொருநாளும் அந்தக்குழந்தையின் உயிர்ப்பிக்கே செலவிட்டாள். கூலிவேலை செய்தாள், சித்தாள் வேலையும் செய்தாள்.சித்தாள்களை பற்றிய தவறான கட்டுகதைகள் பரவ, கொஞ்ச காலம் விறகு சுமந்தாள். சொற்ப வ ருமானத்தில் அவன் மானம் காக்க துணிகள் தைத்தாள். வளர்ந்தான் அவன். பள்ளியிலும் சேர்க்கமுடியவில்லை. சக சிறுவர்களும் சேர்ப்பாரில்லை. அவள் முதுமையை கைப்பிடித்தபோது அவனை அரம் அடிக்கும் கொல்லனிடம் துருத்தி ஊத அனுப்பினாள். அன்றாடம் ஐந்துரூபாய் சம்பளம். அதில் கழிந்தது சில காலம். எவராயிருந்தாலும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் அப்படி ஒரு வயிற்றுவலி.அப்படியும் பொறுமையுடன் பொங்கிப்போட்டாள். மகனுக்கு திருட்டுப்பழக்கம் உள்ளதென அக்கம் பக்கம் பேசுகையில் மௌனம் மட்டுமே காத்தாள். சாராயக்கடையில் ஒருவனுடன் பார்த்ததாக சொன்னபோதும் காதில்

பருவமே புதிய சேட்டை பண்ணு...

பலசரக்கு கடையில் பொட்டலம் மடிக்க என்று குமுதம், விகடன், வாரமலர், நாளிதழ்கள் என்று சைஸ் வாரியாக கிலோகணக்கில் வாங்குவோம். அதில் அதிர்ஷ்ட வசமாக "பருவகாலம்" புத்தகங்களும் ஒளிந்திருக்கும். அப்பா சந்தைக்குப்போகும் சமயம் ஏதேச்சையாக தென்படும் அப்புத்தகங்களை நானும் அண்ணனும் தனித்தனியே நைசாக லவட்டிவிடுவோம். நான் அதை படிக்க ஏதுவான இடமாக உறவுக்கார பையனின் அறையை தேர்வு செய்தேன். அது ஒரு சாணம் மொழுகிய குடிசை. அவன் படிப்பதற்கென்றே ஒதுக்கப்பட்டது. பெரும்பாலும் அமைதியின் திருவுருமாய் இருப்பா ன். ஊரில் அவனுக்கு அடக்கமான பையன் என்ற பேர். பாடப்புத்தகங்களுக்கு நடுவில் "அந்த" புத்தகங்களை சொருகி எடுத்துக்கொண்டு அம்மாவிடம் செல்வன் வீட்டில் படிக்கப்போகிறேன் என்று சொல்லி அவன் அறைக்கு வந்து படிப்பேன். அரைநிர்வாண படங்களும், மாமியின் கதைகளும் காம ஹார்மோன்களை அதிகம் சுரக்கச்செயது, முகப்பருக்களை அதிகமாக்கியது. செல்வனுக்கு அதைப்படிப்பதில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. பாடமெல்லாம் படித்துமுடித்தது போக, கடைசியில் இரண்டு பக்கங்களை புரட்டினாலே அவனுக்கு வயிற்றை புரட்டும். எச்சில் உலர்ந்துவிடும். ஓரே அற

ஏய் நில்லு லைசென்ஸ் இருக்கா?

இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் எவரேனும் ட்ராபிக் போலீசிடம் பிடிபடாமல் வந்திருக்கிறோமா? மூன்று வண்டியில் நான்கு மிலிட்டரி ஃபுல் பாட்டில்களுடன் ஐந்து நண்பர்கள் கொடைக்கானல் கிளம்பினோம். வழிநெடுக ஒவ்வொரு வளைவிலும் தாகம் தீர்த்துக்கொண்டோம். மூஞ்சிக்கல் நெருங்கும் முன்பே இரண்டு பாட்டில் காலி. இரவு ஏழுமணிவரை லேக். பின் நான்கு மணிநேர இடைவெளியில் தெளியவிருந்த போதையை மற்றுமொரு பாட்டில் துணைகொண்டு தடுத்தோம். அறையில் சிதறிக்கிடந்த சிப்ஸ் துகள்களுக்கு நடுவே படுத்துறங்கினோம். சாதாரண போ ர்வையே போதுமானதாய் இருந்தது. மீதிக்குளிருக்கு உள்ளிருந்த திரவம் உபகாரமாய் இருந்தது. ஒருவனுக்கு ஆறு மணிக்கு முழிப்பு வந்தவுடன் பதட்டமாய் எல்லோரையும் எழுப்பினான். அரைத்தூக்கத்தில் அலங்கோலமாய் எழுந்து விசாரித்தோம். "விடிஞ்சிடுச்சுடா" என்றான் அதிகாலையை ஆர்வமாய் ரசித்தபடி. "அதுக்கு?" "டேய் இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்" என கட்டிலுக்கடியில் கிடந்த ஒருபாட்டிலை எடுத்தான் முதலிரவுக்கு மூர்க்கமாக தயாராகும் ஒரு புதுமாப்பிள்ளை போல. "டேய்...உன் வாழ்க்கையில சரக்கை பாத்ததே இல்லியா?" என்று கேட்