ஊடகம்

வெகுஜன ஊடகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களாகிய ஜனங்களை தங்களின் மலிவான பாலியல் சித்தாந்தங்களோடு எப்படி கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன என்பது தெரிந்திருந்தும் கூட அவர்களை எவ்வாறு அதிலிருந்து மீட்டெடுக்கவேண்டும் என்கிற உத்தி நிறையப்படித்தவர்களுக்கே தெரியவில்லை. எதிரெதிர் பாலினக்கவர்ச்சிகளுக்காக அவ்வூடகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்றும் காட்சிகள் நின்றபாடில்லை. தொலைக்காட்சிகளில் இல்லதரசர்களும்/அரசிகளும் மூழ்கியுள்ள நிலையில், தத்தமது பிள்ளைகள் இணையத்தில் மட்டுமே மூழ்கியும் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமின்றி தவிக்கிறார்கள்.கண்முன்னே தெரியும் நேரடிக்காட்சிகளைக்கூட ரசிப்பதை தவிர்த்துவிட்டு அதை இணையத்திலும் ஊடகங்களிலும் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏன் வந்தது எனத்தெரியவில்லை. நம் உயிரை மெல்லக்குடிக்கும் போதை வஸ்துக்களை விட இவை ஆபத்தானது என்பதை எப்போது அறியப்போகிறோம்?வாழ்வியல் ரசனைகள் குறைந்து போவதுகூட வன்மத்திற்கான வாசலை திறந்துவிடும்.பாலியல் வன்மம் மட்டுமில்லை சகமனிதன் மீதான அன்பும் அருகாமை வீட்டாரின் உறவுமின்றி தனித்துவிடப்பட்டிருக்கும் நாம் இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை அரங்கேற்ற காத்திருக்கிறோமோ தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

அறிமுகம்

தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!