கடலூர்

ONIDA SERVICE -ல் பாண்டிச்சேரி அலுவலகத்தில் சில ஆண்டுகள் டெக்னீசியனாக வேலை பார்த்தேன்.எனக்கு பண்ரூட்டி டீலர் விசிட்.நண்பன் மணிக்கு கடலூர் டீலர் விசிட். கம்பெனியிலிருந்து கடலூரில் ஒரு வீடு பிடித்து தந்தார்கள்.நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து கால்ஸ் பார்க்கவேண்டும் அதை முடிக்கவே இரவு எட்டு ஆகிவிடும்.அன்றைக்கு ஏழு மணிக்கு மேல் பேஜரில் ஒரு கம்ப்ளைன்ட் பார்க்க முகவரி கொடுத்திருந்தார்கள்.கடலூர் முகவரி மணியிடம் முகவரியை சொல்லி பார்க்கசொன்னேன்.சலிப்புடன் மறுத்தான்.TODAY ITSELFஎன்று வேறு தகவல்.கெஞ்சியதின் பின் இரவு எட்டுமணிக்குமேல் சென்று சிலநிமிடங்களில் பார்த்துவிட்டு பில் புக்கில் 1250 என்று எழுதவும் பதட்டமாகி வாய் பிளந்திருக்கிறார்கள்.அவனுடன் வம்பு செய்யும் நோக்கில் என்ன பொருள் மாற்றினீர்கள் இதற்கு எவ்வளவு என்று கணக்கு கேட்டிருக்கிறார்கள்.பட்டியலில் உள்ள விலையை இவன் சொன்னதும் "டேய்..சரஸ்வதி எலக்ட்ரானிக்ஸ் கடையில இது எவ்ளோன்னு கேட்டு வாடா .." என்று ஒருவன் மற்றொருவனை ஏவி விட இரண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம்.ஐந்தாறு தடியர்கள் முறைத்தவண்ணம் அவனை நெருங்க, பதட்டமாகி இன்சார்ஜ்ஐ அலைபேசியில் பிடித்து, பேரம் பேசி, அங்கிருந்து ஒருவழியாக ரூம் திரும்பினான் மணி.மறுநாள் ஞாயிறு.கடற்கரை பகுதியில் நடந்து செல்லும் போது ப்ளெக்ஸ் பேனர்களில் குறுந்தாடியில் கரிய உருவம் ஒன்று அலைபேசியில் பேசியபடி இருக்கும் தட்டிகள் அங்கங்கே காணக்கிடைத்தன.பேஜரில் வந்த முகவரியை அழிக்க முயல்கையில் தான் தெரிந்தது அதே பெயர் அந்த தட்டிகளில் இருந்தது. அயோத்திக்குப்பம் வீரமணி.அன்னைக்கு தூங்கியிருப்போம்?

Comments

Popular posts from this blog

அறிமுகம்

SURVIVAL OF THE FITTEST