உதவி இயக்குனநண்பன் ஒருவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டியதிருந்தது. தேனி பாஸ்போர்ட் அலுவலகம் சென்று விசாரித்ததில், பிறப்பு சான்றிதழ் அல்லது வயது நிரூபன சான்று அல்லது அதற்கு ஈடாக பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டார்கள். நண்பன் கோபாவேசத்தில் "சத்யா" கமல் போல என்றோ அவன் சான்றிதழ்களை கிழித்தெறிந்து விட்டிருந்தான். மாற்று சான்றிதழ் இருந்தால் தான் பா.போ.கிடைக்கும் என்ற நிலையில் டூப்ளிகேட் சான்றிதழ் வாங்க நாங்கள் படித்த பள்ளிக்கு சென்றோம். உதவி தலைமை ஆசிரியர் என் மாமா.நெருங்கிய உறவினர். அலுவலகத்தில் க்ளெர்க் எங்களுடன் படித்தவன். எங்கள் செட் ஆசிரியர்கள் சிலரும் இருந்தார்கள். சான்றிதழ் கிடைத்துவிடும் என்று பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. தலைமை ஆசிரியரிடம் விஷயத்தை சொன்னதும் "க்ளெர்க் நண்பனை விசாரித்தார். அவன் ஆமோத்தித்ததும் "அதற்கென்ன சின்ன ஃபார்மாலிட்டி தான், கொடுத்துட்டா போச்சு!" என்றார். கி.நண்பனும் பழைய நோட்டுக்களை புரட்ட ஆரம்பித்தான். விதி என் மாமா ரூபத்தில் த.ஆ அறைக்குள் நுழைந்தது. கதாநாயகன் திருமணத்தில் தாலிகட்டும் சமயம் வில்லன் ஏற்பாடு செய்த ஒரு இளம்பெண் ...
Posts
Showing posts from August, 2013
ஏன் போனான்..ஏன் வந்தான்...
- Get link
- X
- Other Apps
ராஜம்மாள் அத்தை பூவே பூச்சூடவா பத்மினியை நினைவு படுத்துவதாக இருப்பார். கணவர் ஆரம ்பப்பள்ளி ஆசிரியர். இரண்டு பிள்ளைகள் பெற்றெடுப்பதற்கு மட்டும் தன் பங்களிப்பை ஆற்றிவிட்டு ஆற்றோடு போய்விட்டார். மூத்தது பிரேமா சித்தி, இளையவர் ஆனந்த கணேசன். ஆனந்த கணேசன் அந்த தெரு பெண்களே ஆனந்தப்படுமளவு சுதாகர் போல கிப்பி வைத்து செக்கச்செவேலென்று இருப்பார். அவர் வீட்டில் எந்நேரமும் வானொலியில் இலங்கை,திருச்சி, அல்லது ஏதேனும் ஒரு ஒலிபரப்பில் காதல் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். இருந்தும், லீலைகள் புரியாத கிருஷ்ணன். பிரேமா சித்தி கல்யாணம் செய்துகொண்டு புருஷன் வீட்டிற்கு செல்லவும், ஆ.கணேசனை வீட்டிற்கு சென்று பார்க்க சாக்கு கிடைக்காமல் தெருப்பெண்கள் திண்டாடினார்கள். கையில் சிறுகுழந்தைகளான எங்களைப்போன்றவர்களை தூக்கிப்பிடித்து ஆ.க வீட்டின் முன் வயசுப் பெண்கள் மாவு இல்லாமல் கோலம் போடுவார்கள். இருபது வயது பூர்த்தியடையாத நிலையில் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் ஆ.க. காணாமல் போனார். அன்றிலிருந்து பித்துப்பிடித்தது போல இருந்தார் ராஜம்மாள் அத்தை. பத்து பதினைத்து வருடங்கள் ஆனது. எப்போதாவது யாராவது அங்கே...
சிரி..சிரி...
- Get link
- X
- Other Apps
அப்போது எடிட்டர் எல்.கேசவன் ஸார் அலுவலகத்தில் தங்கியிருந்தோம். என்னைத்தவிர இரண்டுபேர் உதவி இயக்குனர்கள். ஆர்.பி சௌத்ரி ஸார் சினிமாவை அப்போது மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தார். ஏராளமான புது இயக்குனர்கள் வந்தார்கள். ஆனால் அனைவரும் விக்ரமனின் கார்பன் பிரதியைப் போலவே ஒரே கதையுடன்தான் காவேரி ரங்கன் தெருவில் இருந்த எஸ்.பி.சௌத்ரி அலுவலகத்தில் தங்கியிருப்பார்கள். அப்போது அருணாச்சலம் ஸ்டுடியோவில் கண்ணங்கர ேர் என்று இருந்த ஒரு இயக்குனர் ஒரு பிரபு படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அவரின் உதவியாளன் மது எங்கள் அறையில் தங்கியிருந்தான். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றபோதுதான் அப்போதைய என் கனவுக்கன்னி(?!) தேவயாணி நடித்துக்கொண்டிருந்தார். இயக்குனரை பார்த்தால் ஒருவரும் நம்ப மாட்டார்கள். கருப்பு உருவத்தில் மிகக்கருப்பு நிறத்தில் உடையணிந்திருப்பார். ஆள்தான் அப்படியே தவிர, அவரது பின்புலம் கே.எஸ்.ரவிகுமார் சார் பட்டறை என தெரிந்தது. "நாட்டாமை" திரைப்படத்தின் காமெடி ட்ராக் அவர் எழுதியது என்று சொன்னார்கள். பிரபலமான காமெடியாயிற்றே! தமிழ் சினிமாவில் சேகுவேராக்கள் பஞ்சமே இல்லை. சாப்ளின்...