Posts

Showing posts from June, 2015

மனநலம்

உங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியரை எப்போதாவது மனநலம் தவறியவராக பார்த்திருக்கிறீர்களா? அதற்கான சாத்தியங்களுடன் தான் இந்த சமூகம் இருக்கிறது          -  ---வண்ணதாசன். பேருந்தில் உடன் பயணித்த அந்த நடுத்தர வயதுக்காரர் தான் இப்போது அடைக்கலமாகியிருப்பது இமையமலையில் என்றார்.”அங்கு சென்று எழுபது வருடங்கள் ஆகிறது என்றும் இப்போது தனக்கு ஐம்பத்தெட்டு வயதாகிறதும் என்றார். புத்தி பேதலிக்காமல், உடுப்பை கிழித்துக்கொள்ளாமல் தினம் தினம் ஷவரம் செய்து புது உடுப்பு போட்டுக்கொண்டும் எழுதப்படிக்க தெரிந்தும் இந்த பேருந்து இந்த இடத்திற்கு செல்கிறது, எந்த நிறுத்தத்தின் பின் தான் இறங்கவேண்டும் எனும் குறைந்த பட்ச பிரக்ஞையுடன் ஆனால் எப்போதோ அல்லது ஏதோ ஒரு காலத்தில் தன் மனதை மனதின் செயல்பாடுகளை உறைய வைத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.. இந்த நிலையிலிருந்து அவர் மீளவிரும்பவில்லையா அல்லது எப்படிப்பிழைத்தாலும் அந்த வயதிற்குப்பின் இந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது எனும் முன் அனுமானத்துடன் இருக்கிறாரா எந்த்தெரியவில்லை.அடுத்த விநாடி பற்றிய நிகழ்வில் அல்லது பொருப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத விட்டேத்தி