நிழற்படம்
முப்பத்தாறு நிழற்படங்கள் பதியக்கூடிய ஃபில்ம் சுருளை உங்கள் கேமராவில் லாவகமாக பொருத்தி, பின்மூடியை அழுத்தி மூடி புகைப்படம் எடுப்பதற்கு தயாராகிறீர்கள்.அதன் லென்ஸுக்கு அப்பால் உங்களுக்கு முன் காட்சிகள் விரியத்தொடங்குகின்றன. அக்காட்சிகளை உங்கள் கைக்கேமராவுக்குள் அடக்க உங்கள் ஆர்வம் பீறிடுகிறது. சுற்றியுள்ள அனைவரும் உங்களை பெரும் புகைப்படக்கலைஞனாக மதித்து அவர்களின் நிழலைத்தர முன் வருகிறார்கள். இப்போது அதன் ஷட்டர் மூடியை கழட்டி உங்கள் கண்களுக்கு மிக அருகில் அதன் குவிக்கண்னாடியை பதிக்கிறீர்கள் முதலில் மங்கலாக பின் அதன் குவிலென்ஸை திருகத்திருக காட்சிகள் ஸ்தூலமாக விரிகின்றன். ஃபில்ம் சுருள் சுழல்வதற்கு முந்தைய கட்டத்தில் உங்கள் ஷட்டர் விலக்கப்பட்டு,அதனுள் நீங்கள் பொதித்த பலம் பொருந்திய மின்கலங்கள் கொடுத்த சக்தியில் அவ்வறையெங்கும் மைக்ரோ செகண்ட் பரவிய வெளிச்சத்தில் எதிரில் இருக்கும் பிம்பம் அதன் பசை தடவிய நாடவில் பதிகிறது, புகைப்படம் 1 என பதிந்த அந்த காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? சுருட்டிவிக்கப்பட்ட அதன் குடுவயிலிருந்து இன்ச் இன்ச்சாக நீளம் வெளிவர வெளிவர இப்போது உங்கள் நினைவுகள் பின...