தங்கம் உங்கள் மேனியில் மட்டும் ஜொலிக்கிறது...!
உங்கள் மேனியில் மின்னும் தங்கம். ஒரு இருண்ட பகுதியில் இருந்துதான் வருகிறது. முன்பெல்லாம் வீட்டில் ஏதேனும் வைபவம் என்றால் நகை எடுக்க நகைக்கடை செல்லமாட்டார்கள். பொன்னாசாரிகளிடம் நேரடியாக தங்கமோ, அதற்கினையான சந்தைமதிப்பில் பணமோ பொருளோ, அல்லது அதனுடன் கொஞ்சம் பழைய தங்கமோ கொடுத்து விருப்பத்திற்கேற்ப நகைகளை செய்யச்சொல்லி கொடுத்துவிடுவாரகள். இன்றைக்கும் சில வீடுகளில் இம்முறையை பின்பற்றுகிறார்கள். இதில் அவரவர் நம்பகத்தன்மை, நற்பெயர்க்கேற்ப செம்பு வெள்ளி கலப்பார்கள். குறைந்தபட்சம் எட்டு விழுக்காடு அதிகபட்சம் பதினைந்துவிழுக்காடு செம்பு, வெள்ளி இதர வேதிப்பொருட்கள் கலப்பார்கள். கடைசியில் கிடைக்கும் ஆபரணத்தங்கத்தின் மதிப்பு கலந்தவைகளை கழித்தால் கிடக்கும் சதவிகிதமே. அதாவது இப்போது கடைகளில் கிடைக்கும் 916 என்பது 91.6 சதவிகிதம் 92 சதவிகிதம் வரை செய்யலாம். இந்த எட்டு விழுக்காட்டில் தோராயமாக அரை விழுக்காடு தவிர மீதி துகள்கள் குப்பைகளில், மெஷின்களில், பயன்படுத்தும் அரம் உள்ளிட்ட பயன்பாட்டுக்கருவிகளில், சட்டையில் என ஒட்டியது அனைத்தும் எடுத்துவிடுவார்கள். அவர்கள் உபயோகிக்கும் சில வேதிப்பொரு...