Posts

Showing posts from May, 2015

SURVIVAL OF THE FITTEST

இப்போதெல்லாம் சுமாரான உணவகங்களில் கூட சாப்பிட்டு முடித்ததும் புத்தகம் போன்ற அட்டைகளில்தான் சாப்பிட்ட ரசீது வைக்கிறார்கள். அனேக சிப்பந்திகளும் மேலைய நாட்டினர் போல் ஒரே நிற உடுப்பணிந்து பவ்யமாக தமிழக அமைச்சர்கள் போல் நின்றுகொண்டுதான் கட்டளை கோருகிறார்கள். எனக்குத்தெரிந்த உள்ளூர் உணவகம் ஒன்றில் பலவருடம் பரிமாறுபவராக சிவராஜ் என்பவர் இருக்கிறார். அறுபதைக்கடந்த அவர் இதற்குமுன் இருந்த உணவகத்தை இழுத்து மூடிவிட்டதால் இப்போது இங்கிருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடன் ஊக்கத்தொகை தருகிறவர் தராதவர் என எந்த பேதமும் இன்றிவாடிக்கையாளர்களை எதிர்கொள்கிறவர். ரசீதை தருவதே சூடம் காட்டும்போது இடது கைவிரல்கள் வலது கணுக்கை அருகேபடும்படி இருக்குமே அப்படி பக்தியுடன் தருவார். சிலர் ஊக்கத்தொகை கொடுக்கும்போதும் அப்படியேதான் பெற்றுக்கொள்வார். என் சிறு வயதிலிருந்தே அவரை அப்படித்தான் பார்த்துவருகிறேன். மீசை அரும்பாத வயதிலேயே அவருக்கு ஒரு முதலாளி தோரணையில் காசு கொடுத்திருக்கிறேன். ஒரு முறை அப்பாவுடன் போகும்போது சாப்பிட்டு முடித்ததும் அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்து நீண்டநேரம் கழித்து அவருக்க