Posts

Showing posts from January, 2013

ஊடகம்

வெகுஜன ஊடகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களாகிய ஜனங்களை தங்களின் மலிவான பாலியல் சித்தாந்தங்களோடு எப்படி கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன என்பது தெரிந்திருந்தும் கூட அவர்களை எவ்வாறு அதிலிருந்து மீட்டெடுக்கவேண்டும் என்கிற உத்தி நிறையப்படித்தவர்களுக்கே தெரியவில்லை. எதிரெதிர் பாலினக்கவர்ச்சிகளுக்காக அவ்வூடகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்றும் காட்சிகள் நின்றபாடில்லை. தொலைக்காட்சிகளில் இல்லதரசர்களும்/அரசிகளு ம் மூழ்கியுள்ள நிலையில், தத்தமது பிள்ளைகள் இணையத்தில் மட்டுமே மூழ்கியும் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமின்றி தவிக்கிறார்கள்.கண்முன்னே தெரியும் நேரடிக்காட்சிகளைக்கூட ரசிப்பதை தவிர்த்துவிட்டு அதை இணையத்திலும் ஊடகங்களிலும் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏன் வந்தது எனத்தெரியவில்லை. நம் உயிரை மெல்லக்குடிக்கும் போதை வஸ்துக்களை விட இவை ஆபத்தானது என்பதை எப்போது அறியப்போகிறோம்?வாழ்வியல் ரசனைகள் குறைந்து போவதுகூட வன்மத்திற்கான வாசலை திறந்துவிடும்.பாலியல் வன்மம் மட்டுமில்லை சகமனிதன் மீதான அன்பும் அருகாமை வீட்டாரின் உறவுமின்றி தனித்துவிடப்பட்டிருக்கும் நாம் இன்னும் என்னவெல்லாம் கொ

கடலூர்

ONIDA SERVICE -ல் பாண்டிச்சேரி அலுவலகத்தில் சில ஆண்டுகள் டெக்னீசியனாக வேலை பார்த்தேன்.எனக்கு பண்ரூட்டி டீலர் விசிட்.நண்பன் மணிக்கு கடலூர் டீலர் விசிட். கம்பெனியிலிருந்து கடலூரில் ஒரு வீடு பிடித்து தந்தார்கள்.நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து கால்ஸ் பார்க்கவேண்டும் அதை முடிக்கவே இரவு எட்டு ஆகிவிடும்.அன்றைக்கு ஏழு மணிக்கு மேல் பேஜரில் ஒரு கம்ப்ளைன்ட் பார்க்க முகவரி கொடுத்திருந்தார்கள்.கடலூர் முகவரி மண ியிடம் முகவரியை சொல்லி பார்க்கசொன்னேன்.சலிப்புடன் மறுத்தான்.TODAY ITSELFஎன்று வேறு தகவல்.கெஞ்சியதின் பின் இரவு எட்டுமணிக்குமேல் சென்று சிலநிமிடங்களில் பார்த்துவிட்டு பில் புக்கில் 1250 என்று எழுதவும் பதட்டமாகி வாய் பிளந்திருக்கிறார்கள்.அவனுடன் வம்பு செய்யும் நோக்கில் என்ன பொருள் மாற்றினீர்கள் இதற்கு எவ்வளவு என்று கணக்கு கேட்டிருக்கிறார்கள்.பட்டியலில் உள்ள விலையை இவன் சொன்னதும் "டேய்..சரஸ்வதி எலக்ட்ரானிக்ஸ் கடையில இது எவ்ளோன்னு கேட்டு வாடா .." என்று ஒருவன் மற்றொருவனை ஏவி விட இரண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம்.ஐந்தாறு தடியர்கள் முறைத்தவண்ணம் அவனை நெருங்க, பதட்டமாகி